தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கியது!

பி.எட் படிப்பு13 மையங்களில் வரும் 10 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நீண்ட வரிசையில் மாணவர்கள் காத்திருந்து விண்ணப்பங்களை பெற்றுச் செல்கின்றனர். ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு தனி கவுண்டரும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு தனி கவுண்டரும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முறை பொறியியல் மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்ப விநியோகம் அதிகரிக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8000 விண்ணப்பங்கள்  அச்சடிக்கப்பட்டுள்ளன என்றும்,  தேவையெனில் கூடுதல் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top