அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழகம் எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டுகிறோம் – சிவாஜிலிங்கம்

sivajilingamஇலங்கையில் உள்நாட்டு விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானத்திற்கு எதிராக தாய் தமிழக மக்கள் ஒருமனதாக எழுந்து நின்று குரல் கொடுக்க இருகரம் நீட்டி வேண்டி கொள்கிறோம் என்று இலங்கை வடக்கு மாகான சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டு கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவாஜிலிங்கம் கூறியதாவது, ” இலங்கையில் அமெரிக்கா கொண்டு வரும் உள்நாட்டு விசாரணையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம். இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல் போன்ற எல்லாவற்றுக்கும் சரவதேச விசாரணையே எமக்குத் தேவையானது.

தொப்புள்கொடி உறவுகளான தாய்தமிழகம் குறிப்பாக மாணவர்கள், பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த நேரத்தில் எழுந்துநின்று மிக உறுதியாக குரல் கொடுக்கவேண்டும் என்று பகிரங்கமாக இருகரம் நீட்டி வேண்டுகின்றோம். மேலும் புலம்பெயர் தேசத்தின் வாழும் எங்கள் ஈழத்தமிழினம் மிக உறுதியாக ஆக்ரோசமாக போராடவேண்டும் என்று இந்த தரணத்தில் தாயகத்தில் இருந்து பகிரங்கமாக வேண்டுகின்றோம்.”

இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காணொளி:-


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top