அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரர், முர்ரே முன்னேற்றம்

a5ca92ab-a3ed-4b36-920c-ba29648eb179_S_secvpfகிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

உலகின் 2–ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 6–1, 6–2, 6–2 என்ற கணக்கில் லியானர்டோ மேயரை (அர்ஜென்டினா) வீழ்த்தி 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

3–ம் நிலை வீரரான ஆண்டிமுர்ரே (இங்கிலாந்து) 7–5, 6–3, 4–6, 6–1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் கைரோஜசை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), தாமஸ் பெர்டிச் (செக்குடியரசு) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஷிமோனா ஹெலப் (ருமேனியா) முதல் சுற்றில் மரினாவை (நியூசிலாந்து) எதிர்கொண்டார். இதில் ஹெலப் 6–2, 3–0 என்ற கணக்கில் இருந்தபோது மரினா காயத்தால் விலகினார். இதனால் ஹெலப் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

4–ம் நிலை வீராங்கணையான வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6–2, 6–0 என்ற கணக்கில் ஜேமிலோயிப்பை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

மற்ற ஆட்டங்களில் குவிட்டோவா (செக் குடியரசு) அசரென்கா (பெலாரஸ்), கெர்பர் (ஜெர்மனி) ஆகியோர் வென்று 2–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

செக்குடியரசுவை சேர்ந்த 6–ம் நிலை வீராங்கனை ஷபரோவா அதிர்ச்சிகரமான தோற்றார். பிரெஞ்சு ஓபனில் 2–வது இடத்தை பிடித்த அவர் 4–6, 1–6 என்ற கணக்கில் லெசினாவிடம் (உக்ரைன்) தோற்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top