ஆபாச வீடியோவை பரப்பி அமிதாப் டிவிட்டர் பக்கம் முடக்கம்!

amidhap pachanதனது டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டு அதில் ஆபாச வீடியோவை சைபர் குற்றவாளிகள் பரப்பியதாக நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

72 வயதான் நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடனும், ஆதரவாளர்களுடம் தொடர்பு கொண்டு அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். டிவிட்டரில் அவரை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அமிதாப்பின் டிவிட்டரை சைபர்கிரைம் குற்றவாளிகள் முடக்கி அதில் ஆபாச வீடியோவை பரவவிட்டனர். இதைப் பார்த்த அமிதாப்பச்சன் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்து புகார் செய்தார்.

அது சரியான பின்பு அமிதாப்பச்சன் குறிப்பிடுகையில், “எனது டிவிட்டரை சிலர் கைப்பற்றி முடக்கினர். அதில் ஆபாச இணைய தளங்களைப் பரவ விட்டனர். யார் இதை செய்தார்கள், சிலர் முயற்சி செய்து இருக்கிறார்கள், நண்பா! எனக்கு இது தேவையில்லாதது” என்று கூறியிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top