உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி: 7 பதக்கங்களுடன் கென்யா அணி முதலிடம்

kenyaசீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 9 நாட்கள் களைகட்டிய உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நிறைவடைந்தன. 7 பதக்கங்களுடன் கென்யா அணி முதலிடம் பிடித்தது.

நிறைவு நாளான இன்று நடைபெற்ற மகளிர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீராங்கனைகள் மூன்று பதக்கங்களையும் அள்ளினர். எத்தியோப்பிய வீராங்கனை அல்மாஷ், பந்தய இலக்கை 14 நிமிடங்கள் 26 நொடிகளில் கடந்து, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனையை படைத்தார். எத்தியோப்பியாவின் சென்பேர் தெப்ரி வெள்ளிப்பதக்கத்தையும், ஜென்ஜேபே திபாபா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

ஆடவர் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவின் அஷ்பேல் கிப்ரோப் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். கென்யாவின் மனான்கோய் வெள்ளிப்பதக்கமும், மொரக்கோவின் அப்டெலாட்டி இக்வைடர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top