அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடரவே இந்தியா விருப்பம்: ராஜ்நாத் சிங்

rajnathஅண்டை நாடுகளுடனும் நல்லுறவை தொடரவே இந்தியா விரும்புவதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மகராஜ்கஞ்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

அப்போதுதான் பேச்சுவார்த்தை குறித்து யோசிக்க முடியும் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுப்பதாக கூறினார். அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவை பேணவே இந்தியா விரும்புவதாகவும் ராஜ்நாத் குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top