வராஹா ரோந்து கப்பல் விவகாரம்: இந்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

vaiko long 1வராஹா ரோந்து கப்பலை இலங்கைக்கு வழங்கியதன் மூலம் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இந்திய அரசுதான் முழுமையாக உதவியதை இது உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்த அதே துரோகத்தை, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் செய்வதாக வைகோ விமர்சித்துள்ளார்.

மத்திய அரசின் செயலை வன்மையாக கண்டித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பலை வழங்குவதா? என வினவியுள்ளார். இதுவரை இலங்கைக்கு இலவசமாக வழங்கியுள்ள 3 போர்க்கப்பல்களையும் இந்தியா திரும்பப்பெற வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top