36 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

indian-women-hockeyபிரேசிலில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டியின் அரையிறுதியில், ஸ்பெயின் அணி தோல்வி அடைந்ததால் இந்திய அணிக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் 1980ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற நீண்ட காலம் கடின முயற்சி செய்ததாக ஹாக்கி அணியின் கேப்டன் ரீது ராணி தெரிவித்துள்ளார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top