இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிதோற்கடிக்கப்படும்; ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை

இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படும் என்று பட்டேல் சமூகத்தலைவர் ஹர்திக் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்தில் 12 சதவீதம் உள்ள தங்களை இதர பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அம்மாநிலத்தில் பட்டேல் சமூகத்தினர் தொடர் போராட்டம் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததால் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

போராட்டகாரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான 7 பேர் உள்ளிட்ட 10 பேர் கலவரத்தில் உயிரிழந்தனர். இதனிடையே இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காகவே பட்டேல் சமூகத்தினர் போராட்டம் நடத்துவதாக எழுந்த குற்றச்சாட்டை ஹர்திக் பட்டேல் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இட ஒதுக்கீட்டுக்கு தாங்கல் எதிராணவர்கள் அல்ல என்று கூறி அவர் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டை பெறுவதே தாங்கல் லட்சியம் என்று குறிப்பிட்ட ஹர்திக் பட்டேல் இதே பிரச்சனைக்காக போராடி வரும் குஜராத் சமூகத் தலைவர்களை டெல்லியில் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக கூறினார். விவசாய தொழிலில் ஈடுபட்டுவரும் பட்டேல் சமூகத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக பாரதிய ஜனதாவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top