குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

gujarat-1குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக அகமதாபாத் நகரில் இணையத்தள பாவனையை குஜராத் அரசு முடக்கியுள்ளது.

கடந்த சில தினங்களாக பட்டேல் சமூகத்தினர் குஜராத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வன்முறை வெடித்தது.

குஜராத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் 22 வயதான ஹர்டிக் பட்டேல் வாட்ச்ஆப் மற்றும் முகநூல் வாயிலாக போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதால் கடந்த 25ஆம் தேதி முதல் வரும் 28ஆம் தேதி வரை அகமதாபாத் நகரில் இணையத் தள பாவனையை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.

குஜராத்தின் 6ஆவது மிகப் பெரிய நகரமாகவும்,இந்தியாவின் 7ஆவது மிகப் பெரிய நகரமாகவும் விளங்கும் அகமதாபாத் நகரில் 6.3 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top