ரியேக்ஷன் காட்டாத தளபதி; கடுப்பில் பிரபல நடிகர்

Captureதமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான அந்த தளபதி நடிகர், படப்பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் எந்தவொரு விசயத்தை சொன்னாலும் அதுகுறித்து பெரிதாக ரியேக்ட் பண்ண மாட்டார். ஏதாவது சொல்லி சின்ன சிரிப்போடு கழன்று கொள்வார்.

இதனால் அவர் என்ன நினைத்திருப்பார், அவருடைய கருத்து என்ன என்பது அவரை நேரில் சார்ந்தவர்களால்கூட புரிந்துகொள்ள முடியாமல் குழம்பிப்போவார்கள். இந்த நிலையில், இரண்டு பெருந்தலைகளிடம் ஆதரவு கோரச்சென்ற அந்த திமிரு நடிகர், தளபதியை மட்டும் சந்திக்க செல்லவில்லையாம்.

மாறாக, தனது அணியில் உள்ளவர்களை அனுப்பி ஆதரவு கோரியுள்ளார். ஆனால் அப்படி சென்றவர்களிடம் தளபதியோ, பெரிதாக எந்தவித ரியேக்ஷனும் காட்டவில்லையாம். வாங்க டீ சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு, வந்ததற்கான காரணம்கூட கேட்காமல் ‘ஷாட் ரெடியாகிடுச்சு, நான் கிளம்புறேன்’ என்று சொல்லி நழுவி விட்டாராம். இதனால் தளபதியின் ஆதரவு நமக்கு இருக்கா இல்லையா என்பது தெரியாமலேயே திமிரு ஆதரவாளர்கள் குழப்பத்துடனேயே திரும்பியுள்ளனர். இதனால் திமிரு நடிகர் சற்று கடுப்பாகிவிட்டாராம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top