நியூட்ரினோ ஆராய்ச்சி என்ற பெயரில் அணுக்கழிவுகளை தமிழர்களின் தலையில் கொட்டுவதை அனுமதிக்க முடியாது: சுப. உதயகுமார்

நியூட்ரினோ ஆராய்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதிலுமுள்ள அணுக்கழிவுகளை தமிழர்களின் தலையில் கொட்டுவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றார் தேசிய அணு உலை எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சுப. உதயகுமார்.

meet

புதுக்கோட்டையில் இயற்றை நலவாழ்வுச்சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது மேலும் கூறியதாவது,

கூடங்களும் பிரச்னை இன்னமும் உயிரோடு தான் உள்ளது. போராட்டம் தொடரும். இடிந்தகரையில் தொடங்கிய போராட்டத்தை தற்போது தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலையை அமைக்க கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு. இந்திய அளவில் அணு உலைகளுக்குகு எதிராகப் போராடும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அணுஉலைக்கு எதிரான தேசிய கூட்டமைப்பை அமைத்து அதன் மூலம் இந்திய அளவில் மாற்று எரிசக்தியைக் கொண்டு வருவதற்காக முயற்சியை எடுத்து வருகிறோம். மகாராஷ்டிராவில் சிவசேனைக்கட்சியும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அணு உலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதே போன்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளோம்,

கூடங்குளம், கல்பாக்கம், மீத்தேன், நியூட்டினோ போன்ற பிரச்னைகளில் திமுக, அதிமுக கட்சிகள் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான அழுத்தங்களையும் கொடுப்போம். நியூட்ரினோ திட்டம் இந்தியா முழுவதும் உள்ள அணுக்கழிவுகளைப் புதைப்பதற்காகப் பயன்படும் அழிவுத்திட்டம். அதற்கென தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அணு உலைக்கழிவுகள் மேலாண்மை எனத்தெளிவாகக்குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம், நியூட்ரினோ ஆய்வை சில ஆண்டுகள் நடத்தி முடித்தபின், எஞசியிருக்கும் சுரங்கத்தில் அணுக்கழிவுகளைக் கொட்டுவதே திட்டம். எனவே தமிழர்கள் தலையில் அணுக்கழிவுகளை கொட்டுவதை எக்காரணத்துக்காகவும் அனுமதிக்க மாட்டோம்.

ஆம் ஆத்மி கட்சி தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையில் எங்களைக் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அதில் சேர்ந்தோம். ஆனால், நடந்தது வேறானதால் அங்கிருந்து வெளியேறிவிட்டோம். பல்வேறு பிரச்னைகளை தனித்தனியாக அந்தந்த பகுதி மக்கள் போராடாமல் ஒட்டு மொத்த பிரச்னைக்காகவும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்பதற்காக இளைஞர்களையும் பல்வேறு அமைப்புளையும் தமிழகம் முழுவதும சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதனடிப்படையில் புதுக்கோட்டையில் ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆனால் மக்கள் போராட்டத்திற்கு பிறகு மீத்தேன் எடுக்கும் முயற்சியை கைவிட்டது. தற்போது மீண்டும் மத்திய அரசின் நிறுவனமான ஓஎன்ஜிசி சார்பில் ஷெல் எரிவாயு எடுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து விரைவில் போராட்டம் தொடங்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்களை தமிழக அரசு வளர்த்து அதை தனியாருக்கு அளித்து வருகிறது. இதனால் நீரா தாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்த பொதுமக்களிடம் விழிப்புணர் பிரசார இயக்கம் விரைவில் நடத்தப்பட உள்ளது.

வரும் 24 – ம் தேதி தொடங்கும் சட்டசபை நிகழ்வில் முன்னாள் குடியரசு தலைவர்அப்துல்கலாம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதே போல் கடந்த 40 ஆண்டுகாக தமிழக மக்களின் நலனுக்காக போராடி உயிர் நீத்த காந்தியவாதி சசிபெருமாளுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார் சுப. உதயகுமார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top