சத்தமில்லாமல் அஜித் செய்த பெரும் உதவி

Captureஅஜித் எப்போதும் தன்னால் முடிந்த உதவியை சத்தமில்லாமல் பலருக்கும் செய்து வருகிறார். இவர் செய்த உதவிகளில் ஒருசில விஷயங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் ஒரு மாற்றுத்திறனாளி அஜித்தை சந்தித்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்த அஜித், உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவர் ஒரு மூன்று சக்கர வண்டி கூட என்னிடம் இல்லை என சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அஜித் உடனே நீங்கள் நாளை வாருங்கள் என்று கூற, அவர் அடுத்த நாள் வருகையில் கொஞ்சம் பணமும் மூன்று சக்கர வண்டி ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளாராம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top