இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

sambantham press meet

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறைந்தது 14 இடங்களை வெல்வது உறுதியாகி விட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் இக்கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி தமிழர் தேசிய கூட்டமைப்பு இதுவரை 10 இடங்களை வென்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 5 தொகுதிகளையும், வன்னு மாவட்டத்தில் 4 தொகுதிகளையும், திரிகோணமலை மாவட்டத்தில் 1 தொகுதியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இது தவிர அங்குள்ள தமிழர் மாவட்ட தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தொகுதிகளும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு தொகுதியும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 14 இடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வென்றால் தேசியப் பட்டியலில் ஒரு இடம் கிடைக்கும்.
உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாங்கிய ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவு இந்தத் தேர்தலில் அதிகரித்திருப்பதாகவே இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டு அளவுகோள்களின் கீழும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் தனது ஆதரவை தக்கவைத்துக்கொண்டது மட்டுமல்ல, அதிகரித்திருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top