பாங்காக் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு!

2தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பாங்காக்கின் சில்டாம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு தெருவில் நேற்று திடீரென சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சித்டாம் பகுதியில் உள்ள ஏரவான் கோயில் முன்பாக, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி) அந்தக் குண்டு வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பிரபல கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில், பலர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக பலியானார்கள். அவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிததாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சித்லாம் பகுதியில் உள்ள ஏரவான் கோயில் முன்பாக, மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5.30 மணி) அந்தக் குண்டு வெடித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.றிக் கிடந்தன.

மேலும், இந்த சம்பவத்தில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட சுமார் 75க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உடனடியாக மீட்புக்குழுவினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், குண்டு வெடித்த பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது, கோவில் வளாகத்தில் ஒரு வெடிக்காத குண்டு கிடந்ததை அவர்கள் கண்டுபிடித்து அகற்றினர். அதேபோல், வணிக வளாகத்திற்கு எதிரே மற்றொரு குண்டும் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு உள்ளதாக ஆளும் ராணுவக் குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியானதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியானது. அதன் பின்னர், காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top