அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் கெர்ரி புகழாரம்; உலகின் கலங்கரை விளக்கமாக உள்ளது இந்தியா

Captureஇந்தியாவின் 69-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உலகின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருந்து வருகிறது’ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சார்பில் அவர் அனுப்பியிருக்கும் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

1947-ம் ஆண்டு முதல் உலகின் கலங்கரை விளக்கமாக இந்தியா இருந்து வருகிறது. புதுமையைப் போற்றும் பொருளாதார சக்தியாகவும், தீவிரவாதத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகமாகவும் மற்றும் சர்வதேச விதிகளைப் பின்பற்றும் ஒரு ராஜதந்திரியாகவும் இந்தியா விளங்குகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும் தத்தமது விழுமியங் களையும் சுதந்திரத்தையும் பேணிக் காக்கும் நாடுகளாக அருகருகே நடைபோடுகின்றன.

இந்த நேரத்தில் இந்தியாவுடன் இன்றியமையாத கூட்டுறவை அமெரிக்கா கொண்டிருப்பது குறித்து பெருமிதம் கொள்கி றோம். இந்தியாவின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நாளில், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோரின் பாரம்பரியத்தை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் காட்டிச் சென்ற அகிம்சைப் பாதையும், மக்களை ஒருங்கிணைக்கும் குடியரசும் இப்போது வரையிலும், பல உலகத் தலைவர்களை அதன்பால் நோக்கி ஈர்த்து வருகிறது.

பனி அடர்ந்த இமயமலைப் பகுதியில் இருந்து காடுகள் நிரம்பிய மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான நிலப்பரப் பில் பல்வேறு விதமான கலாச் சாரங்கள், வரலாறுகள் மற்றும் மக்கள் ஒரு நாட்டின் கீழ் ஒன்றிணைந்திருப்பது உண்மையி லேயே ஆச்சர்யம் அளிக்கும் விஷயம்தான். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top