இலங்கையில் தமிழர்கள் மீதான வன்கொடுமை தொடர்கிறது: பிரிட்டன் மனித உரிமை அமைப்பு தகவல்!

இலங்கையில் கடந்த 2009-ல் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் மீதான வன்கொடுமை இன்றளவும் தொடர்வதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

May312012

‘ஃப்ரீடம் ஃப்ரம் டார்டர்’ (Freedom from Torture) என்ற அந்த அமைப்பானது வன்கொடுமைகளில் இருந்து மீண்டு பிரிட்டனில் அடைக்கலம் தேடி நபர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

அந்நிறுவனமானது களங்கமடைந்த அமைதி (‘Tainted Peace’) என்ற பெயரில் தயாரித்துள்ள புதிய அறிக்கையில், கடைசியாக இலங்கையில் இருந்து மீண்ட பாதிக்கப்பட்ட 148 பேரில் பலரும் சகிக்க முடியாத வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளது.

அதாவது, இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் 100% பேர் கடுமையான அடி, உதை தாக்குதலுக்கு உள்ளாகினர், 78% பேர் தீக்காயங்களுக்குள்ளாகினர், 71% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர், 38% பேர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டனர், 70% பேர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர் எனத் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 17-ம் தேதி தேர்தலை சந்திக்கவிருக்கும் இலங்கை அவசர பணியாக எடுத்துக் கொள்ள வேண்டியது, “ராணுவத்தினர் மற்றும் போலீஸாரால் நடத்தப்படும் வன்கொடுமைகளுக்கு தீர்வு காண்பதே ஆகும்” என வலியுறுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர் முடிந்து 6 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இலங்கையில் அமையும் புதிய அரசானது ராணுவம், போலீஸ், உளவுத்துறையினர் காழ்ப்புணர்ச்சியுடன் நடத்தும் வன்கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல்வேறு தருணங்களில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கூட வன்கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கொடுமைகளில் இருந்து மீண்ட 148 பேரில் 139 தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top