ஸ்பெயினுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ஹாக்கி அணி 1-4 என தோல்வி

f8844233-f7dd-4e76-a9a5-6a2209b449c1_S_secvpfஇந்திய ஹாக்கி அணி ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கனவே, பிரான்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 எனக் கைப்பற்றியது.

இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஸ்பெயின் அணிக்கு எதிரான டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில் ஸ்பெயின் அணி முதல் போட்டியிலேயே இந்தியாவை 4-1 என வீழ்த்தியது.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலையில்தான் இருந்தது. ஆனால், 2-வது பாதி நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். ஸ்பெயின் வீரர்கள் மூன்று கோல்கள் அடித்து இந்தியாவை வீழ்த்தினார்கள்.

இந்திய வீரர் எஸ்.வி. சுனில் இந்தியாவிற்கான கோலை அடித்தார்.

இந்த இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் உல லீக் ஹாக்கி இறுதிப்போட்டி தொடருக்கான ஆயத்த சுற்றுப்பயணமாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top