மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி மசோதா இன்று தாக்கல்

201507200503253559_Tense-political-situationParliament-meets-tomorrow_SECVPFசரக்கு மற்றும் சேவை வரி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இம்மசோதாவை தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இம்மசோதா அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள மறைமுக வரியை நீக்கி அதற்கு பதிலாக ஒரே விதமான வரியை விதிக்க இந்த மசோதா வழிசெய்கிறது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய போதும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பால், மாநிலங்களவை தேர்வுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதை ஆய்வு செய்த அக்குழு, கடந்த மாதம் அதன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இக்குழுவின் பரிந்துரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top