துறையூர் அருகே மரவள்ளிக் கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

accidentதுறையூர் அருகே மரவள்ளிக் கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சமலையிலிருந்து மரவள்ளிக்கிழங்கு ஏற்றப்பட்ட லாரி சேலத்திற்கு சென்றது. இந்த லாரி பச்சமலையிலிருந்து இறங்கும்போது சோபனாபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியின் மேல் அமர்ந்து பயணம் செய்த 18 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தனர்.

படுகாயமடைந்த 7 பேர் துறையூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில் உயிரிழந்த சுரேஷ்குமார், சதீஷ்குமார், குணசேகரன் மற்றும் சுரேஷ், பெருமாள் , முத்துசாமி, ரமேஷ் ஆகிய 7 பேரும் துறையூரை அடுத்த ஒடுவம்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top