ஹிரோசிமா 70 ஆம் ஆண்டு நினைவு நாளில் இடிந்தகரையில் 1 கண்டன ஆர்ப்பாட்டம்(

11825553_739598482853071_1572273287310102202_nஹிரோசிமா நினைவு நாளை ஒட்டி  அணு உலை எதிர்ப்பு போராட்ட களமான இடிந்தகரையில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது  அது தொடர்பாக போராட்ட குழுவை சேர்ந்த முகிலன் தனது முகநுல்  பக்கத்தில் தெரிவித்து இருந்த தகவல் ஆனது .

ஜப்பான் ஹிரோசிமாவில் அமெரிக்காவினால் அணு குண்டு வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட
70 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று 06-08-2015 அன்று இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
சார்பில் கடைபிடிக்கப்பட்டது..

போராட்ட பந்தலில் , போராட்டக்குழு பொறுப்பாளர் முகிலன் தலைமையில், சமூக செயல்பாட்டாளர் மார்தாண்டம் தோழர்.போஸ், ஊர் கமிட்டி தலைவர் திரு .ராயன், போராட்டக் குழு பெண்கள், இடிந்தகரைப் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹிரோசிமா நினைவு நாளில் அணு உலையை விரட்டியடிக்கவும், அணு தீமையற்ற தமிழகம் அமைக்கவுமான போராட்டத்தை தொடரவும் சூளுரை செய்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டதில் அணு தீமையற்ற தமிழகம் அமைக்க கோரியும், கூடங்குளம், கல்பாக்கம் உட்பட அனைத்து அணு உலைகளையும் இழுத்த மூட கோரியும், தேனி – நியூட்ரினோ திட்டத்தை எதிர்தும், மதுரை -வட பளஞ்சி அணுக் கழிவு ஆய்வு மய்யம் அமைக்கக் கூடாது எனவும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
.
– கூடங்குளத்தில் இப்போது ஆண்டு பராமரிப்பு என்று கூறி அணு உலை இயக்கத்தை நிறுத்தியுள்ளனர். அணு உலையில் இருந்து மூன்றில். ஒரு பங்கு யூரோனியம் ராடுகளை (சுமார் 54 எரிகோல்கள்) தற்போது வெளியே எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது . .இவைகள் 48,000 வருடங்கள் வைத்து பாதுகாக்க வேண்டிய அணுக் கழிவுகள் ஆகும். இவற்றை இந்தியா அரசு என்ன செய்யப் போகிறது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிபடையாக தெரியப்படுத்த வேண்டும் எனவும்

-வருகின்ற செப்டெம்பர் மாதத்தில் இடிந்தகரையில் போராட்டம் தொடங்கி 1500 நாட்களானதை ஒட்டியும், அணு உலை எதிர்ப்பு போராட்டதில் இறந்தவர்களின் நினைவு தினமும் கடைபிடிக்கப்படும் எனவும்,

-தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது போட்டுள்ள, இதுவரை திரும்ப பெறாமல் உள்ள சுமார் 145 வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்
தெரிவித்தனர்.
================================================================
இன்றைய இடிந்தகரை கூட்டத்தில்

மது ஒழிப்புப் செயல்பாட்டாளர் அய்யா , சசிபெருமாள்
அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது . மேலும்

-சசிபெருமாள் அவர்கள் காலமெல்லாம் உழைத்த மது அரக்கனை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்

-டாஸ்மாக் கடை எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள மாணவ மாணவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்
·
-குடி கெடுக்கும் டாஸ்மாக் கடை எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழகம் முழுக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 1000 க்கும் மேற்பட்ட சமூக முன்னணியினர், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்
·
எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

மது இல்லா தமிழகம் படைப்பதற்க்காக,
அதை நோக்கி தொடர்ந்து போராடி நிலைமையை
மாற்றுவோம் என கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் உறுதி ஏற்றனர்.

சசிபெருமாள் அவர்களின் கோரிக்கையை ஏற்காத
தமிழக அரசைக் கண்டித்து கூட்டத்தில் அனைவரும்
கருப்பு பாட்ஜ் (மார்பொட்டி) அணிந்து இருந்தனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top