ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய 4,400 மாணவர்கள்

223929-smriti-iraniஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டிக்களில் கடந்த 3 ஆண்டுகளில் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வி கற்பதில் சிரமம் உள்ளதால் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 4,400 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு உறுதிமொழி அளித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,

கடந்த 2012-13 முதல் 2014-15ம் கல்வியாண்டு வரை, நாட்டில் உள்ள 16 ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 2,060 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர். இதேகாலகட்டத்தில் என்.ஐ.டி நிறுவனத்திலிருந்து 2,352 மாணவர்கள் பாதியில் நிறுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.

மேலும் அவர், வேறு கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கு மாறுதல், தனிப்பட்ட காரணங்கள், மருத்துவ காரணங்கள், உயர்நிலை கல்வியில் போது பணி கிடைத்தது மற்றும் கல்வி கற்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அழுத்தம் மற்றும் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி கற்பதில் சிரமப்படும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவும் அரசு உறுதிபூண்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது, 15 ஐ.ஐ.டி நிறுவனங்களும், 30 என்.ஐ.டி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2014 -15 ஆம் ஆண்டில் ஐ.ஐ.டி நிறுவனங்களிடமிருந்து 757 பேர் நீக்கப்பட்டுள்ளனர். 2013-14 காலகட்டத்தில் 697 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.. 2012-13ல் 606 பேர் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். இதில் ரூர்க்கி ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து இருந்து 228 பேரும், காரக்பூர் ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 209 பேரும், டில்லி ஐ.ஐ.டி நிறுவனத்திலிருந்து 169 பேரும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். சென்னை ஐஐடி நிறுவனத்திலிருந்து 8 மாணவர்கள் மட்டும் தங்களது படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

கடந்த 2014-15 ஆண் ஆண்டில் 717 மாணவர்களும். 2013-14 ஆம் ஆண்டில் 785 மாணவர்களும், 2012-13 ஆம் ஆண்டில் 850 மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top