2 ரயில்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

train-derailedமத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பெண்கள், 5 சிறுவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். 25 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

9 பெட்டிகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 250 பேர் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ரயில்வே நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானது குறித்து மத்திய மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி விரைவு ரயில் ஹர்டா அருகே தடம் புரண்டு மசாக் ஆற்றில் கவிழ்ந்தது. அதே இடத்தில் மற்றொரு வழித்தடத்தில் ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற ஜனதா விரைவு ரயிலும் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. மசாக் ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ரயில் தண்டவாளம் மற்றும் ரயில் பாலம் நீரில் மூழ்கியதே விபத்திற்கு காரணம் ரயில்வே வாரியத் தலைவர் மிட்டல் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top