புரோ கபடி லீக் போட்டி: மும்பை டெல்லி அணிகள் இன்று மோதல்!

u-mumba8 அணிகள் இடையிலான 2-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நேற்று ஓய்வு நாளாகும்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் தெலுங்கு டைட்டன்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் தெலுங்கு டைட்டன்ஸ் 5 ஆட்டத்திலும், ஜெய்ப்பூர் அணி 2 ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன.

மற்றொரு ஆட்டத்தில் மும்பை-தபாங் டெல்லி அணிகள் (இரவு 9 மணி) சந்திக்கின்றன. மும்பை அணி இதுவரை ஆடிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெல்லி அணி 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top