5–வது நாள் ஆட்டமும் ரத்து: மிர்பூர் டெஸ்ட் டிரா ஆனது

sssதென்ஆப்பிரிக்கா– வங்காள தேசம் அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்தது. வங்காளதேசம் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து இருந்தது.

2–வது, 3–வது, 4–வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்றைய 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் ‘டிரா’ ஆனது. ஏற்கனவே முதல் டெஸ்டும் மழையால் ‘டிரா’ ஆகி இருந்தது.

20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2–0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. ஆனால் ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2–1 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top