ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி

umman chandiஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்காமல் இருப்பது தவறானது. அவர் மீதான தடையை நீக்க வேண்டும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், ஸ்ரீசாந்த் உள்ளிட்டோ ருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையெனக் கூறி அவர்களை விடுதலை செய்தது. ஆனால் இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்திய பிசிசிஐ, ஸ்ரீசாந்த், அங்கித் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

நீதிமன்றம் விடுதலை செய்திருந் தாலும், பிசிசிஐ விதித்த வாழ்நாள் தடை நீக்கப்பட்டால் மட்டுமே ஸ்ரீசாந்த், சவான் ஆகியோர் கிரிக்கெட் விளையாட முடியும். ஆனால் பிசிசிஐயோ தடையை நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ள உம்மன் சாண்டி மேலும் கூறியிருப் பதாவது: இந்த விஷயத்தில் பிசிசிஐயின் நிலைப்பாடு சரியல்ல.

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து நீதிமன்றமே விடுவித்து விட்டது. இதுபோன்ற சூழலில் நீதிமன்ற தீர்ப்பை ஏற்று ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும். ஆனால் பிசிசிஐயின் நிலைப்பாடோ வேறு மாதிரி இருக்கிறது. இது தவறானது. ஸ்ரீசாந்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top