தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு

Captureதேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் ஆகியோர் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்டாஜ் ஆஷிஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்த கூட்டம் நடைபெறும் என இந்தியா தெரிவித்துள்ளதாக ஆஷிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கெடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top