தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கருணாநிதி வலியுறுத்தல்

karunaமக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மாநில அரசை திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மதுவிலக்கிற்கு ஆதரவாக மக்களின் உணர்வுகள் பெருகி வருவதாக கூறியிருக்கிறார். அதை முன்கூட்டியே புரிந்து கொண்டுதான், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தான் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கைக்காக காந்தியவாதியான சசிபெருமாள் தனது உயிரையே விலையாகத் தந்திருப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது எழுந்துள்ள நிலைமை மாற்று யோசனை எதற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதற்கு பேராதரவாக உள்ளது என அவர் கூறியுள்ளார். ஆகவே, இனியும் தாமதிக்காமல் தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என கருணாநிதி கேட்டுக்கொண்டிருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top