கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

saniaஇந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பெயரை பரிந்துரைத்துள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

மகளிர் இரட்டையர் தரவரிசை யில் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்சா, கடந்த மாதம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை யர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். அதைத் தொடர்ந்து இப்போது அவருடைய பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள மத்திய விளையாட்டுத் துறை செயலாளர் அஜித் சரண், “அகில இந்திய டென்னிஸ் சங்கத்தில் இருந்து தாமதமாகத்தான் பரிந்துரை வந்தது. எனினும் அதை ஏற்றுக் கொண்ட மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், சானியாவின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைத்து விருதுக்கு கமிட்டிக்கு அனுப்பியுள்ளார். எனினும் விருதை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் விருது கமிட்டிக்கே உள்ளது” என்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், மகளிர் இரட்டையர் பிரிவில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டமும் வென்றுள்ளார் சானியா மிர்சா. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல், வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா ஆகியோரின் பெயர்கள் ஏற்கெனவே கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top