ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன்

subramanian swamyமுதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு சென்னை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

முதல் அமைச்சரின் உடல் நலம் குறித்து சமூக வளைதளத்தில் கருத்து தெரிவித்த சுப்ரமணியன்சாமி மீது, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமது டிவிட்டர் பக்கத்தில், முதல்வரின் உடல் நலம் குறித்து, உண்மைக்கு மாறாக உள்நோக்கத்துடன் சுப்பிரமணியன்சாமி கருத்து பதிவு செய்துள்ளார் என்றும், இந்த கருத்து முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவதூறாக கருத்தை பதிவுச் செய்த சுப்பிரமணியன்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி ஆதிநாதன், செப்டம்பர் 25-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க சுப்ரமணியன்சாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top