இந்திய அணி நாளை இலங்கை பயணம்!

ba349f3f-11f4-4ddd-9831-33288bf522c7_S_secvpfவீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது.

இதற்காக இந்திய அணி நாளை மதியம் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டு செல்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.

வீராட் கோலி, புஜாரா, வருண் ஆரோன் ஆகியோர் ஏற்கனவே சென்னையில் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடினர்.

இந்தியா– இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12–ந்தேதி காலையிலேயே தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவனுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் வருகிற 6–ந்தேதி முதல் 8–ந்தேதி வரை நடைபெறும்.

செப்டம்பர் 1–ந்தேதி வரை இந்திய அணி இலங்கையில் விளையாடும்.

இந்திய அணி கடைசியாக 2010–ம் ஆண்டு இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 டெஸ்ட் கொண்ட தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்று இருந்தது. 2–வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 3–வது டெஸ்டில் டோனி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

டோனியின் ஓய்வுக்கு பிறகு வீராட் கோலி சந்திக்க முதல் சவாலான டெஸ்ட் தொடர் இதுவாகும். இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமானது.

இதனால் வீராட் கோலி மிகுந்த பொறுப்புடன் இந்த டெஸ்ட் தொடரை கையாள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் அணி சமீபத்தில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றி இருந்தது. இதனால் வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:–

வீராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விர்த்திமான் சகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top