வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ மேலும் 8 வழக்குகள் பதிவு

CBIநாட்டையே உலுக்கிய வியாபம் ஊழல் விவகாரத்தில், மேலும் 8 வழக்குகளை சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.

முதல் இரண்டு வழக்குகளில் மொத்தம் 50 பேர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. மற்றொரு வழக்கில், 2012-ல் நடைபெற்ற காவலர் தேர்வு வாரிய முறைகேட்டில் தொடர்புடைய இருவர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாக, சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள 8 வழக்குகளையும் சேர்த்து வியாபம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ இதுவரை 23 வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் வியாபம் முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் 50 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததால், அந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ விசாரித்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top