ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3–ந் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார்

201506080330279187_RSS-Chief-Mohan-Bhagwat-Zplus-security_SECVPFஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பகவத் வருகிற 3–ந் தேதி மாலை கன்னியாகுமரி வருகிறார். அன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருவனந்தபுரம் வரும் அவர் கார் மூலம் கன்னியாகுமரி வருகிறார். இரவு விவேகானந்தா கேந்திராவில் ஓய்வெடுக்கிறார்.

4–ந் தேதி காலை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகளுடன் கேந்திர வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். 5–ந் தேதி காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிர்மால்ய தரிசனத்தில் பல்வேறு தரிசனம் செய்கிறார். 6–ந் தேதி காலை கன்னியாகுமரியில் இருந்து கார் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

மோகன் பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கசாமி இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மோகன் பகவத் விவேகானந்தா கேந்திராவில் தங்கும் இடம் மற்றும் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தார்.

உளவுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் முத்துராஜ், கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய ஜோஸ் ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top