சென்னை சூப்பர் கிங்சுக்கு ஆதரவாக ரசிகர்கள் கையெழுத்து: சேப்பாக்கம் மைதானத்தில் திரண்டனர்

7b27907c-0d41-4cac-b63f-98ce9d7a9318_S_secvpfஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய லோதா கமிட்டி குழு சென்னை சூப்பர் சிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளுக்கு இரண்டு ஆண்டு தடை விதித்தது.

இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டோனி தலைமையிலான சென்னை அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதுவரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டி அனைத்திலும் அரை இறுதியில் விளையாடிய ஒரே அணி சென்னை தான்.

நட்சத்திர வீரர் டோனி வழிநடத்தி செல்வதால் சென்னைக்கு கூடுதல் மவுசு ரசிகர்களிடம் இருக்கிறது. சென்னை அணி விளையாடாவிட்டால் ஐ.பி.எல். போட்டியில் சுவாரஸ்சியம் இருக்காது என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

எனவே சென்னை அணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக ரசிகர்கள் ஆகஸ்ட் 1–ந் தேதி (இன்று) சேப்பாக்கம் மைதானத்தின் வெளியே திரள வேண்டும் என்று டோனியின் தீவிர ரசிகர் சரவணன் பேஸ்–புக்கில் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இவர் தனது உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்ட்டை பூசி கொண்டு அதில் டோனி பெயரை வரைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

அவர் கூறுகையில், சென்னை அணியை காப்பாற்ற ரசிகர்கள் ஒன்றாக கூடி கையெழுத்து வாங்க ஊர்வலமாக செல்ல வாருங்கள் என்று பேஸ்–புக், டுவிட்டரில் அழைப்பு விடுத்தேன்.

இந்த அழைப்பை 7 ஆயிரம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். இதன்படி இன்று காலை 10 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தின் வெளியே ரசிகர்கள் திரண்டனர்.

அவர்கள் சென்னை அணியை காப்பாற்றக்கோரி கையெழுத்து போட்டனர். இந்த கையெழுத்துக்கள் கிரிக்கெட் வாரியம் மன்றம் சுப்ரீம் கோர்ட்டிக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top