இலங்கை தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி; 12 பேர் காயம்

கொழும்பு இலங்கையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரிச்சாரத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் காயமடைந்தனர்.

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில் இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த போது முன்னாள் இலங்கை அதிபர் ராசபட்ச மீது பயங்கர குற்றச்சாட்டுகளை கூறி பேசியுள்ளார்.

அப்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கேகாவை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top