மேமன் தூக்கிலிடப்பட்டதை போல் மற்ற வழக்குகளிலும் இதே உறுதியை காட்ட வேண்டும் என்று தமிழர்களுக்கு எதிரான கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தெரிவிக்கிறது

kkkkkkkயாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் கட்சி பேதமின்றி மரண தண்டனைக்கு எதிரான உணர்வை தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தமிழர்களின் உணர்வில் விளையாடியிருக்கிறது. யாகூப் மேமனை நேற்று தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவிப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் மூவருக்கும் தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற தொனியில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம யெச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம யெச்சூரி கருத்து தெரிவிக்கையில், ‘‘யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறைவேற்றி இருப்பது, நீதியின் கருச்சிதைவு’’என்று கூறிவிட்டு .

‘‘யாகூப் வழக்கில் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது. நாட்டின் ஒற்றுமையையும், இறையாண்மையையும் கட்டிக் காக்கிற வகையில், மற்ற வழக்குகளிலும் இதே உறுதியை காட்ட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

மேலும் அவர், ‘‘நீதி வழங்குதல் என்பது அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும். ஒரு பக்கத்தை நீங்கள் நீதியின் முன் நிறுத்துகிறபோது, மற்றொரு பக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. நீதி வழங்கும்முறை பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும்’’ என்று மறைமுகமாக தூக்கு தண்டனையை ஆதரித்து பேசியிருக்கிறார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top