நடிகர் விஜய்யுடன் சிம்பு மற்றும் தனுஷ் சந்திப்பு!

vijay with dhanush simbuநடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஒன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர்.

எதிரரெதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் ‘பஞ்ச்’ வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு நின்றனர். தற்போது இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

பகையை மறந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அடிக்கடி சந்தித்தும் பேசுகிறார்கள். தற்போது கூடுதலாக விஜய்யையும், அணியில் சேர்த்துள்ளனர். இருதினங்களுக்கு முன் விஜய், சிம்பு, தனுஷ் மூவரும் சந்தித்தார்கள். நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். விருந்தும் சாப்பிட்டார்கள். சேர்ந்து நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த படத்தை சிம்பு தனது டூவிட்டரில் வெளியிட்டார். அதில் விஜய், தனுசை சந்தித்தேன். இனிய இரவாக அது இருந்தது. சினிமாவை பற்றி பேசினோம். இசை பற்றியும் விவாதித்தோம். நண்பர்களையும் நினைவு கூர்ந்தோம். நாங்கள் சேர்ந்து இருந்த நேரம் மகிழ்ச்சியான தருணங்களாக அமைந்தது என்று சிம்பு கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top