ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை விவகாரம்: வைகோ தலைமையில் 4–ந்தேதி ஆலோசனை

Vaiko 3_CIம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம் திருப்பதி சேசாசலம் வனப்பகுதியில், எந்த சட்ட விரோதச் செயலிலும் ஈடுபடாத 20 அப்பாவி ஏழைத் தமிழர்களை ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல் படையினர் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து பின்னர் சுட்டுக்கொன்றனர்.

ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் 20 தமிழர்கள் படுகொலை குறித்த வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசை மேற்கொள்ளச் செய்வதற்காக ஜூலை 15–ந்தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கோரிக்கையை முன் வைப்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டி நான் ஜூலை 15–ந்தேதி அன்று முதல்–அமைச்சர் அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பினேன்.

15 நாட்கள் ஆகியும் இது வரை தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. படுகொலை நடைபெற்று இன்றோடு 114 நாட்கள் கடந்துவிட்டன. தமிழர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டிக்கச் செய்யவும், நீதியை நிலைநாட்டவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத் தொகையைப் பெற்றுத் தரவும் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக்கு தாயகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top