லிபியாவில் 4 இந்தியர்கள் கடத்தல்:கடத்தலின் பின்னணியில் ஐ.எஸ்?

islamic-state-syria_650x400_51rfthjhjh4இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் நான்கு பேர் லிபியாவில் கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்கள் கர்நாடக, ஹைதாரபாத்தை சேர்ந்த பேராசிரியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் SIRTE-வில் உள்ள பல்கழைகத்தில் பணிபுரிபவர்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அவர்களை யார் கடத்திச் சென்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் சொந்த ஊரான SIRTE, கடந்த மே மாதம் முதல் ஐ.எஸ் -ன் பிடியில் உள்ளது. கடத்தப்பட்ட நான்கு பேரும் லிபியாவிற்கு செல்வதற்கு முன் மும்பையைச் சேர்ந்த கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top