இலங்கையில் தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்: ராஜபக்சே

rajapakseஇலங்கையில் வருகிற ஆகஸ்டு 17–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் குருனேகலா தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதை தொடர்ந்து கொழும்பில் நேற்று ராஜபக்சே தனது கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதல் பிரதியை புத்த பிட்சுக்கள் பெற்றுக் கொண்டனர்.

தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழர்கள் பகுதியான வடக்கு மாகாணத்திற்கு தன்னாட்சி உரிமை உள்ளிட்ட அதிக அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலின் போது அதில் போட்டியிட்ட ராஜபக்சே தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்கும் புதிய சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக வாக்குறுதி அளித்து இருந்தார். இருந்தும் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.

இறுதி நிலையில் தற்போது பெரும்பான்மையாக வாழும் சிங்களர்களின் ஆதரவை முழுமையாக பெறவே தேர்தல் அறிக்கையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளதாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top