மெட்ரோ ரயில் பணிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்!

விஜயகாந்த்சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளில் விபத்துகள் ஏற்படாதவாறு செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் போக்குவரது பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார். குறிப்பாக சுரங்கப்பாதை வழித்தடங்களில் உள்ள கட்டடங்கள் திடீரென பூமிக்குள் இறங்குவதும், விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழுவதும் தொடர்வதாகவும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையின் மோசமான சாலைகளில், பூமிக்கு அடியில் நடந்து வரும் பணிகளில், விரிசல்கள்- பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆமை‌ வேகத்தில் நடக்கும் மெட்ரோ பணிகளை எக்ஸ்பிரஸ் வேகத்தில் விரைவுப்படுத்தி, இனிமேல் எவ்வித விபத்துகளும் ஏற்படாதவாறு கவனம் செலுத்த வேண்டும் எனவும் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top