டெல்லியில் உஷார் நிலை பஞ்சாப்பில் கொலைவெறியாட்டம்: – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பஞ்சாப் மா6969696நிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்திய ஆவேச தாக்குதலில் 6 பொதுமக்கள், மாவட்ட சூப்பிரண்ட் உள்பட மூன்று போலீசார் என மொத்தம் 9 பேர் பலியாகினர். தீவிரவாதிகளில் ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த களேபரத்துக்கு இடையில் டெல்லியில் பாராளுமன்றத்தின் அருகே சில மர்ம மனிதர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக இன்று பிற்பகலில் தகவல்கள் பரவின, பின்னர், அது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் வேளையாக உள்ளதால் டெல்லி போலீசாரை உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை, ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கும் ரெய்சினா ஹில்ஸ் பகுதி, பாராளுமன்ற கட்டிடம், டெல்லி அரசின் தலைமை தலைமை செயலகம், மத்திய மந்திரிகள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் மற்றும் பிரதான சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top