பஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை’

iபஞ்சாபில் காவல் நிலையம் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக சிக்கவில்லை என முதற்கட்ட தகவலில் தெரிய வருவதாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, “இந்தத் தாக்குதல் மோசமானதுதான். நடந்து கொண்டிருக்கும் ஆபரேஷன் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. ஆபரேஷனில் ராணுவ வீரர்களும் என்எஸ்ஜி கமாண்டோக்களும் இணைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் வசம் யாரும் பிணைக் கைதிகளாக இல்லை.

அனைத்தும் உஷார் நிலையில் உள்ளது. பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் அங்கு விரைவார்கள்” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top