‘வசந்த குமாரன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் இணையும் பாலா!

director bala and vijay sethupathyபி ஸ்டுடியோஸ் எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாலா ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘வசந்த குமாரன்’. இதில் நடிகர் விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கிறார்.

பாலா மற்றும் விஜய் சேதுபதியின் கூட்டணியில் முதன் முறையாக உருவாக உள்ள இப்படத்தை ஆனந்த் குமரேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் என்பவர் இசையமைக்க உள்ள இப்படத்தை, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் என்பவர் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார்.

தற்போது இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் விரைவில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top