தமிழீழ விடுதலையை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி இருசக்கர வாகனப் பிரச்சார பயணம்!

11058301_1441631229496344_4209377091613614157_n

தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழ் இளைஞர்கள் & மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார பயணம் நேற்று (23.07.2015) காலை கோவையில் துவக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழர் விடியல் கட்சியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி,

“ஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமிழ் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. வருகின்ற செப்டம்பர் மாதம் ஐநா மன்றத்தில் இனப்படுகொலை தொடர்பான விசாரணை நடக்க இருக்கிறது.

இலங்கை அரசு மீது நடுநிலையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு தனி தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு, அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த பட வேண்டும் , ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 23.07.2015 அன்று கோவையில் இருந்து நாகை வரை 3 நாள் இருசக்கர வாகன பிரச்சாரம் மேற்கொள்ளபடுகிறது.
வழியெங்கும் உள்ள நகரங்களிளும், கிராமங்களிலும் இக்கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.கரூர் மற்றும் தஞ்சையில் இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் திரையிடப்படுகிறது.

இப்பிரச்சார பயணத்தில் தமிழ் இளைஞர்கள்&மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மற்றும் தோழர்கள் நம்முடன் கலந்து கொள்கின்றனர்.

சீர்காழியில் 25.07.2015 அன்று தமிழர் விடியல் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இப்பொதுகூட்டத்தில் பிரச்சார பயணத்தில் ஈடுபட்ட தமிழர் விடியல் கட்சியினர் , மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு பிரச்சார பயணத்தை நிறைவு செய்கின்றனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top