ஐ.பி.எல். சூதாட்டம்: லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய கங்குலியுடன் 4 பேர் கொண்ட குழு அமைப்பு

ab977c79-1699-42d7-b370-e1a92e203b10_S_secvpfஐ.பி.எல். சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டாண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் லோதா தலைமையிலான தீர்ப்பையடுத்து என்ன செய்யலாம் என்ற முடிவை எடுக்க நேற்று மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. அப்போது லோதா தலைமையிலான தீர்ப்பை ஆராய பணிக் குழு ஒன்றை அமைப்பது. இந்த குழு 6 வாரத்திற்குள் தீர்ப்பு நடவடிக்கைக்கு ஏற்ப என்ன மாற்றம் செய்யலாம் என்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ. இதற்கான இந்த பணிக்குழுவை இன்று அறிவித்தது. இந்தக் குழுவில் பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் அணி ஆலோசகர் குழுவின் ஒரு உறுப்பினரான கங்குலி, அனுருத் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு லோதா தலைமையிலான நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்து, இந்திய கிரிக்கெட்டை எவ்வாறு முன்னேற்றலாம், அடுத்த ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top