ஒருநாள் போட்டி தரவரிசை: இந்திய அணி 2-வது இடத்தில் நீடிப்பு

ec1a108e-aef5-41fd-9c13-ae4e38af2379_S_secvpfஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணிகளின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டு உள்ளது. இந்திய அணி தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. 115 புள்ளிகளுடன் உள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதனால் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது.

முதல் இடத்தில் ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் உள்ளது. 3-வது இடத்தில் நிïசிலாந்து (112), 4-வது இடத்தில் தென்ஆப்பிரிக்க (109), 5-வது இடத்தில், இலங்கை (105) உள்ளன. 6 முதல் 10 இடங்கள் வரை முறையே இங்கிலாந்து, வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். 4-வது இடத்தில் வீராட் கோலி, 7-வது இடத்தில் தவான், 9-வது இடத்தில் டோனி உள்ளனர். முதல் இடத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர்குமார் 4 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார். அக்சர் பட்டேல் 18 இடங்கள் முன்னேறி 47-வது இடத்திலும், மொகித்சர்மா 51-வது இடத்திலும் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top