கேமன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ரத்து: கேள்விக்குறி ஆகியுள்ளது மெட்ரோ பணிகள்!

02HYVGN01-HMR_G_HY_1475204gகேமன் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரத்து செய்ததால், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் சேவைக்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக பொது மக்களும், வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னையில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பெரும்பாலான பணிகள் இரவு நேரங்களில் தான் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், கேமன் – மாஸ் மெட்ரோ நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் ரத்து செய்தது.

இதனால் மே தினப்பூங்கா முதல் சைதாப்பேட்டை வரை மெட்ரோ வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தாமதங்களால் தாங்களும் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் காரணமாக ஏற்கனவே போக்குவரத்து வழித்தட மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

தற்போது ஒப்பந்த விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் திட்டத்திற்கான பணிகளில் ஏற்பட்டுள்ள தொய்வு, தங்களை மேலும் காயப்படுத்துவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை பெரிதும் கட்டுப்படுத்த உதவும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முழு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பமாக உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top