மன்னார்குடி அருகே விவசாயிகள் எதிர்ப்பு; ஓஎன்ஜிசி [ONGC] துரப்பண கட்டுமானம் தகர்ப்பு!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள விக்கிரபாண்டியம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் சுற்றிலும் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, துரப்பண பணிகளுக்கான முதல் கட்ட பணிகளான இரும்புக் கொட்டகை அமைக்கும் பணியும், சிறிய கட்டிடம் கட்டும் பணியும் நடைபெற்று வந்தது.

Untitled

இந்த நிலையில், அந்த இடத்துக்கு நேற்று பிற்பகல் வந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், விக்கிரபாண்டியம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், கிராம மக்களும் அங்கு பணிபுரிந்தவர்களை, கட்டுமான இயந்திரங்களை எடுத்துக் கொண்டு வெளியேறச் செய்தனர். பின்னர், அங்கு அமைக்கப்பட்டு வந்த இரும்பு கொட்டகை கட்டுமானத்தை அகற்றி கோஷமிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top