சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரத்து: கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

e9767133-180e-4932-9859-f7e82eb39e65_S_secvpfசாம்பியன் லீக், 20 ஓவர் போட்டி 2009–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான 7–வது சாம்பியன்ஸ் லீக் போட்டி செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் போட்டியை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில் இது அறிவிக்கப்பட்டது.

ரசிகர்களின் ஆதரவு இந்தப் போட்டிக்கு போதுமான அளவுக்கு இல்லாததால் சாம்பியன் லீக் போட்டி கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2 ஆண்டு தடை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் ஆட முடியாது. சென்னை அணி இந்த ஐ.பி.எல். போட்டியில் 2–வது இடத்தை பிடித்தது. சென்னை அணி இல்லாததால் ரசிகர்களின் ஆதரவு போதுமான அளவுக்கு இருக்காது. இதன் காரணமாக இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top